தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய கல்லூரி, வீடு, அலுவலகம் நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு, உறவினர்கள் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவரது (பைனான்ஸ்) நிதி நிறுவனம் மற்றும் வையாபுரி நகர் முதல் கிராஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு, தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் கவுன்சிலர் வீடு மற்றும் அவரது அலுவலகம் என கரூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் நேற்று காலை 7 மணியிலிருந்து 15 மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு நேரத்திலும் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்தது.
மேலும் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சக்திவேல் என்பவரது வீட்டில் நேற்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 07.00 மணி அளவில் முடிந்தது. இந்த நிலையில் கரூரில் மூன்று இடங்களில் மட்டும் தொடர்ந்து இரவிலும் நடைபெறும் சோதனையின் வாயிலாக, அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம் எனவும், அதன் அடிப்படையில் தொடர் சோதனை நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இரவு நேரத்திலும் சோதனை முடியாமல் தொடரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது .
கடந்த பல்வேறு மாதங்களுக்கு முன்பு கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றன. தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் கரூரில் எ.வ.வேலு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.