கரூரில் கொழுந்துவிட்டு எரியும் குப்பையால் ஏற்படும் புகையால் அப்பகுதியில் குடியிருப்போர் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
கரூர் மாவட்டம் ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கரூர் டூ கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவது உடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் டூ கோவை சாலைப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதால் கொழுந்துவிட்டு எரிகின்றன. எரியும் குப்பையால் ஏற்படும் புகையால் குடியிருப்போர் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகின்றனது.
சாலையை மறைக்கும் அளவிற்கு புகை மூட்டமாக அப்பகுதி முழுவதும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை கொட்டுவதையும் தீ எரிக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்