கரூர் மாவட்டம், கட்டளை காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் கரூர் மாநகராட்சி தாந்தோணி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு காவிரி நீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 40 நாட்களுக்கு முன்பாக காவிரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், இந்தத் திட்டத்திற்காக ஆற்றில் போடப்பட்டிருந்த குழாய்களும், அந்த குழாய்களை தாங்கி நின்ற கட்டுமான பகுதிகளும் இடிந்து வெள்ளத்தில் மூழ்கின.




இதனால் தாந்தோணி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கட்டுப்பாட்டை சமாளிக்க லாரிகள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. பின்னர் அவ்வழியாக செல்லும் விவசாய ஸ்கீம் தண்ணீரை டேங்குகளுக்கு திருப்பி தண்ணீர் வழங்கப்பட்டது. இதற்கிடையே கட்டளை பகுதி காவிரி ஆற்றில் புதிதாக பைப்புகளை இணைத்து தண்ணீர் சப்ளை செய்திட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து, ஒரு வாரம் இப்பணிகள் தாமதம் அடைந்தன. இப்போது ஓரளவிற்கு தண்ணீர் வடிந்துள்ள நிலையில் தற்காலிகமாக தண்ணீர் எடுத்து மக்களுக்கு வழங்கிட பணிகள் முடிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு பூஜைகள் கட்டளை காவிரி ஆற்றில் நடந்தன.




மாநகராட்சி மேயர் கவிதா, துணை மைய சரவணன், மாநகராட்சி ஆணைய ரவிச்சந்திரன், மண்டல தலைவர் கனகராஜ் நகராட்சி, பொறியாளர் நக்கீரன், மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர். பகுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் பணி தொடங்கியது. அப்போது மேயர் கவிதா கூறியதாவது, தாந்தோணி பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்க முடியாத நிலை இருந்தது. இடையில் ஆறுகள் மூலமாகவும், அமராவதி திட்டத்தில் இருந்து மக்களுக்கு ஓரளவிற்கு 20 நாட்களாக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டதை இப்போது இந்த பைப் லைன் திட்டம் நிறைவு பெற்று இனி வழக்கம் போல் தாந்தோணி பகுதிக்கு முழுமையாக குடிநீர் சப்ளை நடைபெறும்.




எதிர்காலத்தில் காவிரி ஆற்றில் நான்கு ஆயிரம் அடி நீர் வந்தாலும் குடிநீர் பைப்பை பாதிக்காத வகையில் காவிரி ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து கரை வரை ஒரு பாலம் கட்டிட ரூம் 3 கோடியில் திட்டம் தயாரிக்கப்படுகிறது. அந்த பணி நிறைவு பெற்றால் குடிநீர் பாதிப்பு என்பது எப்போதும் ஏற்படாது என்றார்.