கரூர் ஈரோடு சாலையில் மருத்துவ நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மழை நீரை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைவிடாது கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் நிரம்பி வழிந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் கரூர் ஆண்டாங் கோயில் மேல்பாகம் மருத்துவ நகர் பகுதியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


 




 


இங்கு சில இடங்களில் தாழ்வான வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளான நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழைநீர் வழியாததால் அதிகாரியிடம் முறையிட்டும் பஞ்சாயத்து தலைவருடைய முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று கரூர்- ஈரோடு சாலையில் திடீரென நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 


 




 


அதைத் தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கரூர் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் நேரில் வந்து பார்வையிட்டு அப்பகுதி பொதுமக்களிடம் மழை நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.


 




 


இதனையடுத்து, ஜேசிபி எந்திரம் மூலம் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் தற்போது சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறு வீடுகளில் மழைநீர் வழியாததால் அப்பகுதியில் வசிக்கும் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் வடிந்த படி தங்களது கோரிக்கையை வைத்தார். கரூர் மருத்துவ நகரில் நடைபெற்ற திடீர் சாலை மறியல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று, அது தொடர்ச்சியாக அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு இணங்க தற்போது சாலை மறியல் கைவிடப்பட்டுள்ளது.