கரூரில் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு - ஊர் மக்கள் வரவேற்பு

புன்னம் கிராமம் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் காலியான இருக்கைகள்- சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு -அப்பகுதி பொதுமக்கள் வரவேற்பு.

Continues below advertisement

கரூர் மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாஸ் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து சத்யா நிறுவனத்தின் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பாலமலை அருகே உள்ள பரணி மகாலில் நடைபெற்றது.

Continues below advertisement

 


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தனர்.

 



அப்பொழுது பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தது. அதேபோல் சமூக ஆர்வலர்கள் சிலர் தற்போது வரவிருக்கும் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்பகுதி ஆண்கள், பெண்கள் என சிலர் கல்குவாரிக்கு வரவேற்பு தெரிவித்தும், கூடுதலாக பெண்கள் சிலர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்களது விருப்பம் மனுவையும் அளித்தனர்.

 



கல்குவாரியால் ஏற்படும் பிரச்சனை குறித்து சமூக ஆர்வலர்கள் பேசிய நிலையிலும் அப்பகுதி பொதுமக்கள் கல்குவாரி வருகையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியது.

 



நிகழ்ச்சி முடிந்த பிறகு தேசிய கீதம் ஒலிக்கப்படும் என தெரிவித்தனர். திடீரென மைக்கை பிடித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயக்குமார் தனது மென்மையான குரலில் தேசிய கீதத்தை பாட அவருடன் சேர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பின் தொடர்ந்து பாடலை பாடினர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola