கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் இப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி காகித ஆலையின் 30க்கும் மேற்பட்ட பக்காஸ் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் இருந்து மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து  அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் இப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி காகித ஆலையின் 30க்கும் மேற்பட்ட பக்காஸ் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement


நேற்று இரவு பெய்த கனமழையினால் காகித ஆலையின் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை எனவும், மழை அதிக அளவு பொய்தால் ஆலையில் இருந்து திறக்கப்படும் கழிவுநீர் மழைநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுங்களுக்குள் புகுந்து விடுவதாக குற்றம் சாட்டினர்.


பின்னர் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் வட்டாச்சியர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது நேற்று பெய்த மழையில் உடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். ஊருக்குள் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.  


மேலும் இந்த காகித ஆலையால் இப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப் படுவதாகவும், அதனால் இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு கல்வி இலவச மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola