பொங்கல் முடிந்து பலரும் , தங்களது சொந்த ஊரிலிருந்து வேலைக்காகாக மீண்டும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் , புகார் தரலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் புகார் எண்களையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


பொங்கல் பண்டிகை


தமிழர் திருநாளாகவும் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் விழாவாகவும், பொங்கல் விழா இருந்து வருகிறது‌. உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களும், ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் விழாவாக பொங்கல் பண்டிகை இருக்கின்றது.


இந்நிலையில், இப்பண்டிகையை கொண்டாட பலரும், வேலை உள்ளிட்ட காரணங்களால் வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது. 


Also Read: அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது செங்கலை எரிந்த பாஜகவினர்? அதிர்ச்சியளிக்கும் காட்சி.! பரபரப்பில் டெல்லி தேர்தல்


திரும்பி வரும் மக்கள்:


இந்நிலையில், தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட, அதிகளவு பொதுமக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்தனர். இதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.


இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை நிறைவடைந்த நிலையில், மீண்டும் வேலைக்காக சொந்த ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு படையெடுக்க தொடங்குயுள்ளனர். இந்த தருணத்தில் தனியார் ஆம்னி  பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. 


Also Read: Erode East Election: 3 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு: திமுக -நாதக பிளானுக்கு கொட்டு வைத்த தேர்தல் ஆணையம்


புகார் எண்கள் அறிவிப்பு:


இதையடுத்து, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் , புகார் தரலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


மேலும் , ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 425 6151 , 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.