கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடவம்பாடி கீரனூர், பண்ணைப்பட்டி, தென்னிலை ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடவம்பாடி ஊராட்சி முத்தம்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ₹4.90 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை பார்வையிட்டு பயன்பாடு குறித்து கலெக்டர் கேட்டறிந்ததோடு அனைத்து வீடுகளுக்கும் சரியான நேரத்தில் குடிநீர் வழங்கவும் பொதுமக்கள் தேக்கி வைக்கும் குடிநீர் தொட்டியில் கொசு புழுக்கள் உருவாகாத வகையில் மூடி வைக்க அறிவுறுத்தினார்.


 



 


மேலும், குடிநீர் தேக்கி வைக்கப்படும் தொட்டியை ஆய்வு செய்து எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை குளோரிநேஷன் கொண்டு சுத்தம் செய்யப்படும் கால நேரத்தை குறிப்பிட்டு வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தனிநபர் மேலாண்மை துறை சார்பில் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி ஜகஜோதி என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து பூங்காறு வாரியை சீர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகள் பார்வையிடப்பட்டது.


 



 


தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹5.50 மதிப்பில் வடவம்பாடி முதல் கரட்டுப்பட்டி வரை பூங்காறு வாரியில் நீர் உறிஞ்சு குழி அமைக்கும் பணிகளையும் வெல்லப்பட்டி ஊராட்சி வேலாயுதம்பாளையம் கிராமத்தில் ரூபாய் 38.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல விடுதி கட்டிட பணிகளை பார்வையிட்டு கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படும் செங்கல் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 


 




 


கீரனூர் ஊராட்சி உடையப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 50.89 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும், இதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 12,000 மதிப்பில் தனி நபர் உறிஞ்சுழி பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் ₹42.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலகம் கட்டிடப் பணிகள் தென்னிலை ஊராட்சி கீழே சக்கரக்கோட்டை கிராமத்தில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் ரூபாய் 2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடு பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் வாணீஸ்வரி, செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி ராஜேந்திரன், தாசில்தார் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலட்சுமி, கோபாலகிருஷ்ணன், பெரியசாமி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.


 


தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு.


கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராமராஜ் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத் துணை இயக்குனர் பூவிதா, நீதித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, தன்னார்வள அமைப்புகள் அடங்கிய குழுவினர் கரூர் மாவட்டத்தில் உள்ள ரைஸ்மில், செங்கல் சூளை, கோழி பண்ணைகளில் திடீர் ஆய்வு நடத்தினார்


கொத்தடிமை தொழிலாளர் முறை உள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்களா என்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம் பருவத்தினர் பணியில் உள்ளனரா என்றும், 6 நிறுவனங்கள், 6 உணவு நிறுவனங்கள் என்று மொத்தம் 12 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.


வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் இருந்தால் அவர்கள் விவரங்களை தொழிலாளர் நலத்துறையின் https://labour.tn.gov.in/ism என்ற வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்தார்.