மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் 27 பயனாளிகளுக்கு ரூ.77.20 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 பயனாளிகளுக்கு ரூ.77,19,596 அரசு நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 346 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 53 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 3 நபருக்கு தலா ரூ.4999 மதிப்பீட்டில் ரூ.14,997 மதிப்பீட்டில் கதொலி கருவிகளையும், 1 நபர்க்கு ரூ.790 மதிப்பீட்டில் ஊன்றுகோல்களையும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.340 மதிப்பீட்டில் ஊன்றுகோல் மற்றும் கறுப்பு கண்ணாடியும், தாட்கோ திட்டத்தின் கீழ் சார்பில் 22 பயனாளிகளுக்கு தலா ரூ.77,03,469 கடனுதவிகளுக்கான ஆணைகளையும், என மொத்தம் 27 மாற்றுத்திறனாளி மற்றும் பயனாளிகளுக்கு ரூ.77,19,596 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
முன்னதாக கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளில் 2021-22 ஆம் ஆண்டின் சிறந்த விடுதிகள் காப்பாளர், காப்பாளினிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000 –க்கான காசோலை மற்றும் கேடயமும், இரண்டாம் பரிசு ரூ.5,000 –க்கான காசோலை மற்றும் கேடயமும், முன்றாம் பரிசு ரூ.3000 –க்கான காசோலை மற்றும் கேடயத்தினை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு மாநில் ஊரக வாழ்வதார இயக்கத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து காக்கும் வகையில் 11 வகையான விழிப்புணர்வு சுவரொட்டியினை வெளியிட்டார்கள். தொடர்ந்து தமிழ்நாடு மாநில் ஊரக வாழ்வதார இயக்கத்தின் சார்பில் 1 பயனாளிக்கு தகவல் பதிவிற்கான பணிநியமண ஆணையினையும், பேரூராட்சி துறை சார்பில் வரிதண்டலராக பணிபுரிந்த திரு.தங்கத்துரை என்பவர் பணிகாலத்தில் பணியிடை காலமானதை தொடர்ந்து அவரது வாரிசுதார்ரும் மகனுமான திரு.ரகுபிரசாத் அவர்களுக்கு புலியூர் பேரூராட்சியில் வரித்தண்டலருக்கான பணிநியமண ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திரு.சீனிவாசன், தனித் துணை ஆட்சியர்(கலால்) திரு.பாலசுப்பிரமணியன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.