பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைவு


அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 100 கன அடி மட்டுமே திறக்கப்படுவதால் கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 608 கன அடி ஆக நீர்வரத்து குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 89.37 அடியாக இருந்தது அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில் 250 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.




 


அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில்  தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. தடுப்பணைக்கு 865 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 774 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.


மாயனூர் கதவணை


காவிரி ஆற்றில் கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 11,830 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரத்து 426 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 10,16 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 1,320 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


 




நங்கஞ்சி அணை


திண்டுக்கல் மாவட்டம் மலைப்பகுதிகளில் மழை காரணமாக காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்தது. நங்கஞ்சி ஆற்றில் வினாடிக்கு இரண்டு கன அடி தண்ணீரும், நான்கு கிளை பாசன வாய்க்காலில் தலா 10 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 18 39 புள்ளி 37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 39.35 அடியாக இருந்தது.


 


ஆத்துப்பாளையம் அணை



கா. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அணைத்து தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.17 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீரை திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.





 


பொன்னணி ஆறு அணை


கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு  காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 28 அடியாக இருந்தது.


மழை நிலவரம்


கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யவில்லை.மழை வரத்து இல்லாததால் பாசன விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.