சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,  சார்பில் "பெண்குழந்தைகளை காப்போம்பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்’’ தொடர்பான மாவட்ட அளவிலான செயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


 




கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும் பெண்குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் பாலின பாகுபாட்டை நீக்கிடவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மாவட்ட அளவிலான செயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,


 “பெண் குழந்தையை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டமானது கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கவும், பெண் குழந்தைகளின் கல்வி தடை இல்லாமல் தொடரவும்,  குழந்தை திருமணங்களை தடுக்கவும்,பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வுகளை அதிகபடுத்த மரம் நடுதல் (இளந்தளிர்), மாரத்தான், திறன் மேம்பாட்டுப்பயிற்சி, சுய பாதுகாப்பிற்கான பயிற்சி  மேற்கொள்ளப்படும் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவியர்களை ஊக்குவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்,  கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் அக்பர்கான், தனித்துணை ஆட்சியர் (சபாதி), சைபுதீன், இணைஇயக்குநர், துணை இயக்குநர் பொது சுகாதாரம் மரு.ரமாமணி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, , மாவட்ட சமூகநல அலுவலர் சண்முகவடிவு, திட்ட அலுவலர் குழந்தை வளர்ச்சி திட்டம் நாகலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், திரு.தாஸ்தீன்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா,  சட்டப்பணிகள் ஆணைக்குழு, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


 




 


ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் பூசாரி அர்ச்சகர்கள் பாதிரியர்கள் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் பூசாரி அர்ச்சகர்கள், பாதிரியர்கள், உலமாக்கல்கள், மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்..பிரபுசங்கர்.... அவர்கள் அவர்கள் தலைமையில் இன்று (01.03.2023) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,


குழந்தை திருமணத்தை தடுக்க சட்டபூர்வமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருந்தாலும் சமூக ரீதியாகவும் ஒரு குழந்தையால் மணப்பெண்ணாக இருக்கக்கூடிய பக்குவத்தை உடல் அளவிலும் மனதளவிலும் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக குழந்தை திருமணங்கள் நம்முடைய மாவட்டத்தில் நடைபெற்ற வருகிறது வேதனைக்குரிய விஷயம் பல்வேறு திருமணங்களை தடுத்து இருக்கிறோம் பெரும்பான்மையான இடங்களில் எவ்வளவு விழிப்புணர்வு அளித்தும் குழந்தை திருமணங்கள் மண்டபம் மற்றும் கோவில்கள் வழிபாட்டு தளங்களில் குழந்தைகள் திருமணங்கள் நடைபெற்று வருவது என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த கூட்டம் இது குறித்து மீண்டும் ஒருமுறை குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தினுடைய அம்சங்களை புரிந்து வலியுறுத்துவதற்காக இந்த கூட்டத்தை நாம் திரும்பவும் கூட்டி இருக்கிறோம். அனைத்து சமயங்களை சேர்ந்த திருமண வைபோகத்தை நடத்தி வைப்பவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.


இது போன்ற விஷயங்கள் தங்களுக்கு தகவல் தெரிந்தால் அதை நீங்களே தடுக்கலாம் மணப்பெண்ணிற்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். இதை நீங்களே எடுத்துரைக்க வேண்டும் உங்களிடம் இந்த நல்ல ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் மேலும் குழந்தை திருமண சட்டப்படி குழந்தை திருமணத்தில் ஈடுபடக்கூடிய மணமகன் வீட்டார் மற்றும் இதனை நடத்தக்கூடிய பெற்றோர் மட்டும் இன்றி அந்த குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்களும் தண்டனைக்குரியவர்கள் என்ற விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 


 




 


திருமண மண்டபம் உரிமையாளர்கள், திருமணம் நடத்தி வைப்பவர்கள் திருமணத்திற்காக பத்திரிக்கை அச்சடித்தவர் எந்த சமயமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் அவர்களை தண்டிக்க கூடிய அளவிற்கு சட்டம் கடுமையாக வரப் பெற்றுள்ளது. சமீப காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இது போன்ற விஷயங்களில் அனுமதிக்க இயலாது எனவே அனைவரும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை நல்குமாறு கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். குழந்தை திருமணங்கள் நடந்தால் காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்தவிசியத்தில் மிக கண்டிப்பாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் திருமணம் ஆகி 18 வயதிற்கு கீழாக உள்ள தாய்மார்களுக்கு சுகாதாரத் துறையில் பராமரிக்க வந்தால் அதனை வைத்து நாங்கள் வழக்கு பதிவு செய்யவும் தயாராக உள்ளோம். மேலும், வயது சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டுகளில் பெண்களின் வயது கணக்கில் எடுத்து கொள்ளவும் குழந்தை திருமணம் இல்லாத கரூர் மாவட்டமாக திகழ முழு ஒத்துழைப்பு நீங்கள் அளிக்க வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்..பிரபுசங்கர்.... அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம. லியாகத்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி. பிரியா, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு. சைபுதீன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அக்பர்கான் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.