தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற கொடைக்கானல் பகுதியைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.





கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கை பார்ப்பதற்காக விடுமுறை நாள் என்பதால் கொடைக்கானலில் இருந்து மணிகண்டன் (24), பாலமுருகன் (23) இருவரும் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். கார்த்திக்கை பார்ப்பதற்காக நேற்றுமுன் தினம் இருவரும் கரூர் வந்த நிலையில் நேற்று மூன்று இளைஞர்களும் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.


 




 


அப்பொழுது மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் முதலில் குளிப்பதற்காக நீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் ஆழமான இடத்திற்கு சென்றதால் நீர் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மற்றும் பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த பிறகு இருவரையும் சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


 




கரூரில் நண்பனை பார்க்க வந்த நிலையில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கரூர் காவிரி ஆற்றல் கரை பகுதிகளில் ஆங்காங்கே பதாகைகள் காவல்துறை சார்பாக வைக்கப்பட்டிருந்த நிலையிலும் சிலர் இது போல் கவன குறைவாலும் , சிலர் மது போதையில் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதன் மூலம் ஏற்படும் துயரத்தை தவிர்க்க  காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்காமல் தவிர்த்து வருவது நல்லது. இது போல் துயரச்சம்பத்தில் இருந்து காப்பாற்ற உதவு என்பது சமூக ஆர்வலரின் வேண்டுகோள்.