கரூர் அருகே ஆபத்தான முறையில் நெடுஞ்சாலை தடுப்புகளை தாண்டி செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் - குகைவழி பாதை அமைக்க கோரிக்கை.


 


 




கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம், வேலூர் ஆகிய ஊர்களுக்கு இடையே காவிரி ஆற்றை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 


 


 


 




 


இந்த பாலத்திற்கு அருகில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம் தவிட்டுப்பாளையம் ஆகும். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த வழியாக செல்லக்கூடிய முக்கிய தேசிய நெடுஞ்சாலை NH-7 கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்கிறது. தவுட்டுப்பாளையம் பகுதியில் இருந்து இரண்டு மாவட்டங்களுக்கும் கல்வி பயிலவும், தொழிலுக்காகவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். 


இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பொதுப் போக்குவரத்திற்காக குகை வழி பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. மேலும், அண்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் இதுகுறித்த தீர்மானம் பொதுமக்களால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை நெடுஞ்சாலைத்துறை இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. 


 


 





இதன் காரணமாக நீண்ட தூரம் சாலையை சுற்றி கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலை தடுப்புகளை தாண்டி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக அப்பகுதியில் குகை வழி பாதை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண