கரூர் கோவில் நில ஆவணங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் - திருத்தொண்டர் சபை நிறுவனர்

கோவில் நில ஆவணங்களை அலுவலர்கள் பராமரிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கரூரில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பேட்டி.அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Continues below advertisement

கோவில் நில ஆவணங்களை அலுவலர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கரூரில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

Continues below advertisement



கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை மற்றும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டு, அந்தந்த மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர் மூலமாக ஒப்பு நோக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியல் திருக்கோவில் நிர்வாகத்தினருக்கே தெரியாமல் இருக்கிறது. அந்த நிலங்களையும் மீட்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட வேண்டி உள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இன்னும் அடுத்த ஐந்தாண்டு காலங்களுக்குள் முன்மாதிரியாக செயல்படுத்தப்படும். 


மத்திய சட்டங்கள் இவற்றை கட்டுப்படுத்தாது. அதனால் கோவில் நிலங்களை மீட்பதில் அரசியல் தலையீடுகள் இருந்தாலும், சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. புள்ளி விபரங்கள் பெரும்பாலும் பொய்யானவை என்று அதிகாரிகளுக்கும் தெரியும். பதிவேடுகளின் படி தான் குத்தகைதாரர்கள், ஆக்கிரமித்துள்ளார்கள் என்றால் 70% கிடையாது. 

பல்வேறு இடங்களில் இறந்தவர்கள் பெயரில் கடைகள் உள்ளன. இறந்தவர்கள் எப்படி வாடகை செலுத்த முடியும். மூன்றாம் நபர்கள் பெயரிலும் கடைகள் உள்ளன. இவற்றையெல்லாம் களைவதற்காக ஆதார் அட்டையுடன் இணைத்து வாடகைதாரர்களுக்கும், குத்தகைதாரர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்ட்டு, அந்தந்த கடைகள் முன்பு தொங்கவிட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆக்கிரமிப்புகள் குறையும். நீண்ட நாட்களாக இந்த கோரிக்கை நிலுவையில் உள்ளது. அலுவலர்கள் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.  இந்த இரண்டு இனங்கள் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக திருத்தொண்டர் சபை இராதாகிருஷ்ணன் இந்த வீடியோ கரூர் மாநகரப் பகுதியில் ரத்தனம் சாலை பகுதியில் அமைந்துள்ள கரூர் ஸ்ரீ கல்யாண மசூதி ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்தார் அப்போது கோவில் தொடர்பான நில ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாத குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola