வேலாயுதம்பாளையம் அருகே முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 99வது பிறந்த நாளுக்கு கொடிக்கம்பம் வைக்க வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில் கவுண்டன்புதூர் பிரிவு சாலை அருகே முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு புதிதாக கொடிக்கம்பம் நடுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் குழி பறித்து கம்பம் நடுவதற்காக கான்கிரீட் போட்டுள்ளனர். பின்னர் அந்த இடத்தில் கம்பத்தை முழுமையாக நடுவதற்காக ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவு சாலை பகுதியில் புதிதாக கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறினார். பாஜக கட்சியினர் அந்த இடத்தில் கம்பத்தை நட்டு நாளை காலை கொடியேற்றி இனிப்புகள் வழங்கி முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்தநாள் கொண்டாடப் போவதாகவும், இங்கு பல்வேறு கட்சியின் கொடிகள் உள்ளதாகவும் பாஜக கொடிக்கம்பம் நடுவதற்கு மட்டும் ஏன் அனுமதி அளிக்க மாட்டீர்கள் என தெரிவித்தனர்.
அதற்கு காவல்துறையினர் ஊராட்சியில் அனுமதி பெற்று கொடிக்கம்பத்தை நட வேண்டும் என்று கூறினார் இதனால் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாஜக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அப்பகுதியில் குவிந்தனர். இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியாக பாஜகவினர் 50 பேர் வந்ததால் போலீசார் கொடிக்கம்பம் நடக்கக்கூடாது என்று கூறியுள்ளீர்கள் நாங்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கொடிக்கம்பம் நட உள்ளதாக தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.