வேலாயுதம்பாளையம் பகுதியில் 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மூன்று நபர்களை  குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை மற்றும் காவல் துறையினர்  கைது செய்தனர்.


 


 




கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலை வீதி ரவுண்டானா பகுதியில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறையினர் மற்றும் காவல்துறையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து வந்த டாடா ஏசி வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 28 மூட்டைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேல், பிரதீப், விஜய் ஆகிய மூன்று நபர்களும் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை சுற்றி வளைத்து குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து கைது செய்து 15 நாள்  காவலுக்கு அனுப்பி வைத்தனர்.



 


நொய்யல் வேலாயுதம்பாளையம் போலீஸ் ஷாப்பிங் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ், கரூர் மாவட்ட குடிமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வேணும் நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. 


 




 


ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல், நன்செய் இடையாறு தெற்கு தெருவை சேர்ந்த பிரதீப், பாலப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த விஜய் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 28 மூட்டைகளில் இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசியுடன், சரக்கு வேனே போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.