சைக்கிளில் இந்தியா முழுவதும் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் முதியவர் கரூர் வந்தடைந்தார்.


 




 


குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ரசிக் போலா. இந்தியா முழுவதும் சைக்கிளில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் இவர், கரூர் வந்தடைந்தார்.  கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த இவர், கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள முக்கிய ஆன்மீக தலங்களுக்கு செல்கிறார். 64 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபயணமாக தனது ஆன்மீக யாத்திரையை துவங்கிய இவர், 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக சைக்கிளில் இந்தியா முழுவதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு, முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். 


 




கடந்த மூன்று மாதத்திற்கு முன் சென்னை வந்த இவர், தற்போது பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு, கரூர் வந்துள்ளார். கரூர் வழியாக நாமக்கல் செல்லும் இவர், நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு, அங்கிருந்து தனது ஆன்மீகப் பயணத்தை தொடர்கிறார். இதுவரை 20 ஆயிரம் கி.மீ பயணம் மேற்கொண்டுள்ள இவருக்கு ஒவ்வொரு ஊரிலும் சிவனடியார்களும், ஆன்மீக பக்தர்களும் பண உதவியும், பொருள் உதவியும் வழங்கி, இவரது ஆன்மீக யாத்திரைக்கு உதவி புரிகின்றனர்.