கரூரில் இரத்தசோகை குறைபாடு உள்ள மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரை

பள்ளி  மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். இரத்தசோகை குறைபாடு உள்ள மாணவிகளுக்கு இரும்புசத்து மாத்திரை.

Continues below advertisement

பள்ளி  மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். தொடர்ந்து உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை குறைபாடு உள்ள மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கினார்.

Continues below advertisement

கரூர் மாவட்டம், அரவகுறிச்சி வட்டம் மலைகோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்  பள்ளி  மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து  உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை சற்று குறைபாடு  உள்ள மாணவிகளுக்கு இரும்புசத்து மாத்திரைகளை வழங்கினார்.

 


 

 

பின்னர்  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் 1-19 வயதுடையவர்கள் மற்றும் 20-30 வயதுடைய பெண்கள் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இன்றைய தினம் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் விடுபட்ட நபர்களுக்கு இம்மாத்திரை 21.02.2023 அன்றும் வழங்கப்படஉள்ளது. இதன் தொடர்ச்சியாக, , கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும்1-19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் 20-30 வயதுடையபெண்கள் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) மொத்தம் 3,69,759 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இம்மாத்திரையானது, 1-2 வயதுடைய குழந்தைகளுக்கு 200மிலி கிராம் அரைமாத்திரையும், 2-19 வயதுடைய குழந்தைகளுக்கு  400 மிலிகிராம் ஒரு மாத்திரையும் வழங்கப்பட வேண்டும். இம்மாத்திரையினை நன்கு கடித்து, சுவைத்து, மென்று சாப்பிடவேண்டும். இம்மாத்திரை உட்கொள்ளும் போது எவ்வித உபாதைகளும் ஏற்பட 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

 

 


 

இக்குடற்புழு தொற்று உள்ள குழந்தைகளிடம் அவர்கள் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் விட்டமின்கள் போன்றவற்றை எடுத்து அவை உண்பதால் தொற்று உள்ள நபர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. மேலும் விட்டமின் ஏ குறைபாடு ஏற்படுகிறது. இத்தொற்று உள்ளவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, பலவீனம் மற்றும் பசியின்மை போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படும். இத்தொற்று நீங்குவதால் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உடல் வளர்ச்சி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு, நோய் தொற்று எதிர்ப்பு,  சிறந்து கற்கும்திறன், மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் ஏற்படுகிறது.

உதிரம் உயர்த்துவோம் திட்டம்

உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 17,000 மாணவியர்களுக்கு இரத்த மாதிரி எடுக்கப்பட்டு மூலம் மாணவியர்களுக்கு இரத்த மாதிரி எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் Mild, Moderate, Severe என பிரிக்கப்பட்டு அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது, வரப்பெற்ற முடிவில் 527 மாணவியர்களுக்கு Severe இரத்தசோகை உள்ளதாக பதிவாகி உள்ளவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்துவகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 3698 மாணவியர்களுக்கு  Mild இரத்தசோகை இருப்பதாகவும், 3498 மாணவியர்களுக்கு Moderate இரத்தசோகை இருப்பதாகவும் கண்டறியப்பட்டு மொத்தம் 7,196 மாணவியர்களுக்கு மஞ்சள்நிறஅட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவியர்களுக்கு, குழந்தைகள் நலப்பிரிவின் பரிந்துரையின் பேரில் மூலம் ஒரு நாளைக்கு 60 mg அளவுள்ள இரண்டு இரும்புசத்து மாத்திரைகள் வழங்கப்படஉள்ளது. இம்மாத்திரை 3 மாதங்களுக்கு வழங்க குழந்தைகள் நலப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது. முதல் மாத்திரையை பள்ளியில் உணவு உண்டு விட்டு Nodalஆசிரியர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டாவது மாத்திரையை இரவில்  பெற்றோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆகையால்  இம்முகாமினை நல்லமுறையில் பயன்படுத்தி மாணவியர்கள் அனைவரும் இரும்பு சத்து மாத்திரையினை எடுத்துக் கொண்டு இரத்தசோகை இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

 

 


 

 

முன்னதாக கைகழுவும் செயல்முறை விளக்கத்தினை செவிலியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு ;செய்து காண்பித்து  கைகளை சுத்தம் வைத்து கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (சுகாதார பணிகள்)மரு.ரமாமணி. துணை இயக்கநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சந்தோஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.கௌசல்யா, வட்டாட்சியர்.திரு.செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola