கரூர் மாயனூர் கதவணை வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம் - விவசாயிகள் பாதிப்பு

காவிரியில் 8,572 கனஅடியும், தென்கரை வாய்க்காலில், 400 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி.

Continues below advertisement

மாயனூர் கதவணை வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம். 

Continues below advertisement

மாயனூர் கதவணையிலிருந்து செல்லும் வாய்க்காலில், நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், மூன்று மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் உள்ள காவிரி புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் கிருஷ்ணராயபுரம், பழைய கட்டளை, தென்கரை ஆகிய வாய்க்கால்கள் செல்கிறது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் ,39,000, 887 ஏக்கர் நிலம் பாசன வாசன வசதி பெறுகிறது . மேலும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 107 குளங்கள் மூலம், 12,294 ஏக்கர் நிலங்கள், திருச்சி மாவட்டத்தில் 8,338 ஏக்கர் நீளங்கள் பாசன வசதி பெறும் இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

 

 


 

 

 

இதனால், மாயனூர் கதவணையில் 8,972 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், காவிரியில் 8,572 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 400 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. மற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து, பொதுப்பணி நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது, மேட்டூர் அணையில் நீர் இருப்பு சரிவு காரணமாக திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மேலும், 10 ஆயிரம் கன அடிக்கு மேல் திறந்தால் மட்டுமே பாசன வாய்க்கால்களுக்கு போதிய அளவு போதிய அளவில் திறக்க முடியும்.

 

 


 

தற்போது, 9,000 அடிக்கு திறக்கப்படுவதால், பாசன வாய்க்கால்களுக்கு முறை விட்டு தண்ணீர் திறக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் தண்ணீர் வேண்டும் என்பதால், தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

 


மற்ற வாய்க்கால்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்கப்படும். கட்டளை மேட்டு வாய்க்கால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், மூன்று மாவட்ட விவசாயிகளின் சாகுபடி பாதிக்கப்படும். இங்கு நெல் சாகுபடி  மட்டுமின்றி வாழை, வெற்றிலை, கரும்பு போன்ற பயிர்களில் தண்ணீர் கிடைக்காமல் வாடும்  நிலை ஏற்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola