கரூர் வெங்கமேடு பகுதியைச் சார்ந்த பாபு என்ற மாற்றுத்திறனாளி பலமுறை வீடு கட்டித் தர வேண்டும் என மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முற்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்


 




கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான பாபு. இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வந்தார். அப்பொழுது மாற்றுத்திறனாளி பாபு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் வீடு கட்டி தராததால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வருகிறது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


 


 




மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாற்றுத்திறனாளி பாபு, தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளியான என்னால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வீடு வாடகை கட்ட முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு வீடு கட்டித் தர வேண்டும் என பலமுறை மனு அளித்தும் மாவட்ட ஆட்சியர், அரசு துறை அலுவலகங்கள் என பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.


 




அரசுத்துறை அதிகாரிகள் அலைய வைப்பதாகவும் அதிகாரிகளை சந்திக்க சென்றாலும் அவர்கள் இருப்பதில்லை தொடர்ந்து அலைக்கழிக்க விடுவதாகவும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார். அப்பொழுது அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர் அவர் மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் காவல் துறையினர் அவரை மாவட்ட ஆட்சியரிடம் சந்திக்க அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.