கரூரில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அரசுக்கு எதிராக, கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் நிர்வாகிகள்.


 




கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கரூர் மாவட்ட சங்கத்தின் தலைவர் ஜெயவேல் தலைமையில் தமிழக அரசுக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 


 




 


இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், 70 வயது கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதலாக ஓய்வூதிய வழங்க உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


 




 


இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். மேலும் 5 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தையும் இணைத்தும் பணியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போன்ற சங்கங்களை இணைத்து வலிமையான போராட்டம் நடத்தப்படும் என அப்பொழுது தெரிவித்தார்.