கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினம் கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நீதிபதி ஆர். சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி 08.4.2024 முதல் 12.4.2024 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்ட சமரச மையத்தில் சமரச நாள் வாரமானது தொடர்ந்து நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும், வழக்காடிகளும் கரூர் மாவட்ட சமரச மையத்தை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குள் ஏற்படும் சச்சரவுகளை சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ளுமாறு முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினம் கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பாக 10.04.2024 ம் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கரூர் அரசு மற்றும் கலைக்கல்லூரி, சாரதா நிகேதன் கல்லூரி, அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர். பேரணியானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி அண்ணா வளைவு, கரூர் மாரியம்மன் கோவில் ஜவஹர் பஜார் மற்றும் அரச மரத்தெரு வழியாக பழைய நீதிமன்ற வளாகத்தில் பேரணி முடித்து வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.