கரூர் அருகே புதிதாக அமைய உள்ள கிரானைட் கல் குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கரூர் அடுத்த வெள்ளியணை அருகே உள்ள கே.பிச்சம்பட்டி கிராமத்தில் புதிதாக கிரானைட் கல் குவாரி அமைப்பதற்கு கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வெள்ளியனையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கல்குவாரி அமைக்கப்படவுள்ள அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வேறொரு இடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதால், எங்கள் பகுதியில் ஏற்கனவே நீர் ஆதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக கல்குவாரி அமைத்தால் இயற்கை வளங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் எனக்கூறி கே.பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தும், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலி கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கல்குவாரிக்கு ஆதரவாக வேறொரு பகுதியில் இருந்து அழைத்து வந்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டி, வருகை பதிவேட்டில் உள்ளவர்கள் எந்த ஊர் என்று கேட்டு வருகை பதிவேட்டை பறிக்க முயற்சித்ததால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளின் சமரசத்திற்கு பின்னர் கருத்து தெரிவித்த பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ள குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் அதுல மாதாளத்திற்கு சென்று விட்டது,
மேலும், குவாரிகளை அமைப்பதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நீர்வழிப் பாதைகளை அழித்து குவாரிகள் அமைப்பதால் இப்பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படும், இதனால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பிரச்சனை ஏற்படும், குவாரிகள் அருகில் பல குடியிருப்புகள் உள்ளதால் குவாரியில் வைக்கப்படும் விடியால் குடியிருப்பு கட்டிடங்கள் பாதிப்படைகிறது. வாரியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் வெளி ஆட்களை வைத்து வேலை செய்வதால், படித்த உள்ளுறை சேர்ந்த இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்பன உட்பட பல்வேறு எதிர்ப்பு கருத்துக்களை எடுத்து கூறி குவாரி அமைக்க கூடாது என கூறினார். பொதுமக்கள் கருத்துக்களை அதிகாரிகள் பதிவு செய்துகொண்டு பின் கூட்டம் நிறைவு பெற்றது.
மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன, இந்த வார்டு பகுதிகளை கண்காணித்து சீரமைக்கும் வகையில் நான்கு மண்டலங்களாக பிரித்து சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளாக உள்ள தாந்தோணி மலை, இனாம் கரூர், வடிவேல் நகர், வெங்ககல்பட்டி, பசுபதிபாளையம், போன்ற பல்வேறு பகுதிகளில் நெருக்கமான முறையில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தற்போது அதிகளவு கொசுக்கள் உற்பத்தி ஆகி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை முடிந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், மாலை முதல் அதிகாலை வரை கொசுக்கள் அதிகளவில் உலாவி மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மாநகர நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பணியாளர்களை நியமித்து, கொசு ஒழிப்பில் தீவிரம் காட்டிய அதனை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.