கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின்வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டை தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில், வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கரூர் - சேலம் சாலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான வீடு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலை மூன்று கார்களில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை ஓரமாக நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் துணையோடு சோதனையில் ஈடுபட்டனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான பங்களா கட்டுமான பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் அவரது நண்பர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள் என வீட்டில் கடந்த 26 ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக வருமானவரித்துறைநர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக சோதனை செய்யவுள்ளனர். தற்போது ஒவ்வொரு இடமாக நான்காவது நாளாக சோதனை துவங்கியுள்ளனர். கரூர் காந்திகிராமம் பிரேம்குமார் வீட்டில் சோதனை சற்று முன் துவங்கி உள்ளது.