செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரனைபுதுச்சேரி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மோகன்ராஜ் (24). மோகன்ராஜ் ஏசி சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் instagram மூலம் நண்பர்கள் ஆன இவர்கள் ஒரே, பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் காதலராக மாறியதாக கூறப்படுகிறது.
காதலன் தற்கொலை:
இந்நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மோகன்ராஜ் இடம் அந்தப் பெண் கடந்த ஒரு வாரமாக இன்ஸ்டாகிராம் காதலி சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மோகன்ராஜ் ஒரு வாரமாகவே கடும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மோகன்ராஜ், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது தாயின் புடவையை எடுத்து ஃபேனில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் காரணை புதுச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தகவல்களின் பெயரில் சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி சண்டையிட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்