மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


 




மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், அணைப்பாளையம் அணைக்கு வந்து சேர்ந்தது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு வரத்து வினாடிக்கு, 2,822 கனஅடியாக இருந்தது.


 




இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகளில், பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து வினாடிக்கு, 4,180 கனடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிக்காக, காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


அமராவதி அணை: 


 




திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு வினாடிக்கு 861 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து, 1,006 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் கடந்த, 12ல் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் அருகே உள்ள அணைப்பாளையம் அணைக்கு வந்து சேர்ந்தது. அமராவதி அணையில் இருந்து நிலவரப்படி ஆற்றில் வினாடிக்கு, 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையில் நீர்மட்டம் 63.72 அடியாக இருந்தது.