கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது.


 




கீழ்கட்டளை வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், ஆகிய மூன்று வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.



அமராவதி அணை


 




 


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 489 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 56.70 அடியாக இருந்தது.



ஆத்துப்பாளையம் அணை:


 




 


கரூர் மாவட்டம் கா பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 8.72 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.