அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு


அமராவதி அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 100 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு  காலை, வினாடிக்கு, 955 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 858 கண்ணாடியாக நீர்வரத்து குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 88.32 அடியாக இருந்தது.




நீர்வரத்து குறைந்ததால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் 100 கன அடியாக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 350 காண அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு 2,713 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றுப்பகுதிகளில் மழை குறைவால் காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,821 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.


 





மாயனூர் கதவணை


காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 16,766 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,097 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 14,077 கனஅடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 1,120  கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


நங்காஞ்சி அணை


திண்டுக்கல் மாவட்டம் நங்கஞ்சி அணைக்கு வடக்காடு மலைப்பகுதியில் மழை காரணமாக காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 69 காண அடி தண்ணீர் வந்தது ஆற்றில் வினாடிக்கு 29 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது மேலும் 4 பாசனக் கிளை வாய்க்கால்களில் வினாடிக்கு தலா 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது 39.37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 39.35 அடியாக இருந்தது.


ஆத்துப்பாளையம் அணை


கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து இல்லை.  26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.17 அடியாக இருந்தது நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 




 


பொன்னணி ஆறு அணை


கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைத்து காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 28.03 அடியாக இருந்தது