கரூர் மாவட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமண ஏற்பாடு.




 


முன்னாள் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப மகளின் திருமண செலவை ஏற்றார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் செ.காமராஜ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் மாதந்தோறும், சட்டமன்ற உறுப்பினர் சம்பளத் தொகையை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வந்தார்.


இந்நிலையில் கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், செம்பிநத்தம் கிராம, நாயக்கனூர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆய்வு பணிக்கு சென்ற போது தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பூமி ராஜ் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நேரடியாக சந்தித்து அவர் ஆறுதல் கூறிய பிறகு அன்று தனது ஒரு மாத சம்பளத் தொகையை இரு மகளின் மருத்துவச் செலவுக்கு வழங்கினார்.


 




 


அதை தொடர்ந்து, தற்போது வரை அந்த குடும்பத்தை தத்துக்கு எடுத்து, பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் முன்னாள் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தற்போது  தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள மகளின் திருமணத்தை முன் நின்று நடத்தினார்.


திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றிய, பாளையம் பகுதி, சாலப்பட்டியைச் சார்ந்த கருப்புசாமி என்பவரின் மகனுக்கு, பூமி ராஜின் மகள் சின்னமாயி என்பவரின் திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்திற்காக அனைத்து செலவையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் செய்துள்ளார்.


மேலும், அவரது தலைமையில் மிகவும் எளிமையாக திருமண நிகழ்ச்சி நடைபெற்று, கூடியிருந்த அனைவருக்கும் உணவு வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தந்தையாக இருந்து திருமணத்தை நடத்தி முடித்தார்.


கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ காமராஜ் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்தை ஆரம்பத்தில் இருந்தே முன் நின்று நடத்தி இப்போது கடைசி வரை நின்று நடத்தியுள்ளார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தங்கத்தில் தாலியும், கல்யாண மாலையும், உடையும் திருமண ஏற்பாடும் பொது மக்களுக்கு உணவும் இன்னும் பல்வேறு வகையில் திருமணம் முழுவதும் உள்ள ஏற்பாட்டை செய்துள்ளார்.


 




 


தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்தை நடத்தியதற்காக அப்பெண்ணின் கணவர் நன்றி தெரிவித்தார். அப்பகுதி மக்கள் வியப்பாக அந்த திருமணத்தை பார்த்தனர். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் இதேபோல பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த ஊரில் செய்தி இருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கின்றனர்.


புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும் புது மாப்பிள்ளைக்கு தங்கத்தில் மோதிரமும் வழங்கினார். திருமணத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினருக்கு திருமண குடும்பத்தினர் சால்வையை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காததால், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஏற்பாட்டில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.