மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தராக உருவாக்கிய நபர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி குண்டாறு சிறப்பு ) தலைமையில் கொண்ட அணியினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தகரக் கொட்டகை என்னும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 to 20 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, உடைகள் அணியாமல் சுற்றி திரிந்தும், யாசகம் எடுத்து உணவருந்தியும், தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்திருந்து இருந்தார்.
இந்நிலையில், சுப்பிரமணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் அரசு பேருந்து பணி மனையில் நேரம் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாகவும், இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். சுப்பிரமணி அவர்களிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசுவதில்லை.
கடந்த நான்கு மாதங்களாக சித்தர் என்றும் நெடுஞ்சாலை சித்தர் என்றும் கூறி நாகம்பள்ளி கிராமம், நாகம்பள்ளியை சேர்ந்த செல்லமுத்து மற்றும் நித்தியா, ஆகியோர் தகரக்கொட்டகை, நாகம்பள்ளி கிராமம், அரவக்குறிச்சி தாலுகா, கரூர் மாவட்டம், என்பவரும் மற்றும் ஓரிருவர்கள் சேர்ந்து சித்தர் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியும், ஊடகங்கள் மூலமாக வதந்தியை பரப்பியும் திண்டுக்கல் to கரூர் தேசிய நெடுஞ்சாலை, தகரக் கொட்டகை அருகில் உள்ள நாகம்பள்ளி பிரிவு, பகுதியில் குடிசை போட்டு அமர வைத்து அவரிடம் ஆசி வாங்க வரும் பொதுமக்களிடமிருந்து உண்டியல் வசூல் செய்து சுய லாபம் பெற்று பணம் வசூல் செய்து வருகிறார்கள்.
மேற்கண்ட சுப்பிரமணி என்பவர் அவ்விடத்தில் இருந்து எழுந்து ஓடிச் சென்று பழைய இடமான அரளி செடிக்குள் படுக்க முற்பட்டவரை மேற்கண்ட நபர்கள் இழுத்து வந்து மீண்டும் குடிசைக்குள் அமர வைத்து ஆசி வழங்க வைப்பதாகவும், இது தொடர்பாக தோழர்களம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க மனு அளித்து வலியுறுத்தி வந்த நிலையில்
இன்று மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா (காவிரி குண்டாறு சிறப்பு dro) தலைமையில் மற்றும் அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் அவர்கள் தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.
இதற்காக பாதுகாப்பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சுப்பிரமணியை மீட்டு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.