கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 25,420 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 2,4297 கன அடி தண்ணீர் ஆக உள்ளது. இந்நிலையில் டெல்டா பாசன பகுதிகளின் சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் இருந்து 25417 கன அடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்காலில் 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


 





 


அமராவதி அணையின் தண்ணீர் நிலவரம்


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி  ஆற்று அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 1,758 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் 900 கனஅடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில் 440 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 84.29 கன அடியாக உள்ளது.


 




 நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து எதுவும் இல்லை. மேலும் 39.37 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 32.90 கன அடியாக உள்ளது.


ஆத்துப்பாளையம் அணையின் தண்ணீர் நிலவரம்


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்விழி, ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து எதுவும் இல்லை. மேலும் 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 23.41 கனஅடியாக உள்ளது. 




 


தமிழகத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. கரூர் மாவட்டத்தில் கலந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை ஏதும் பெய்யவில்லை. இதனால், கரூர் மாவட்டத்தில் வறண்ட வானிலேயே காணப்படுகிறது. மேலும், பல்வேறு அணையில் இருந்து நீர்வரத்து குறைந்துள்ளதால் பாசன விவசாயிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.