மாயனூர் கதவணையில் அணை நிலவரம்
மாயனூர் கதவனுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 9,397 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 13,608 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசனா பகுதி சாகுபடி பணிக்காக, காவிரி ஆற்றில் 12,488 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி ஆறு அணை நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு 329 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 900 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் ,83.27 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
நங்காஞ்சி அணை திண்டுக்கல் மாவட்டம், நங்கஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை, 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 32.87 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை நிலவரம்
ஆத்துப்பாளையம் அணை, கரூர் மாவட்டம் , க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை 26. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் ,22.96 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் வினாடிக்கு, 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் காலை நிலவரப்படி மழையின் நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் கரூர் 2.4 மில்லி மீட்டர், அரவக்குறிச்சி 18 மில்லி மீட்டர், அணைப்பாளையம் 26 மில்லி மீட்டர், கா.பரமத்தி 9 மில்லி மீட்டர், மாயனூர் 2 மில்லி மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 4.78 மில்லி மீட்டர் மழை பதிவானது.