மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 49,240 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் இருந்து 40,337 கன அடி தண்ணீரும், மூன்று பாசனகளை வாய்க்கால்களில் வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்று பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி அணையின் தற்போதைய தண்ணீர் நிலவரம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3280 கனஅடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 2,442 கனடி தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் புதிய பாசன வாய்க்கால்களின் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 87.54 கனியாக உள்ளது. அதேபோல் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு வினாடிக்கு 2,238 கன அடியாக இருந்தது.
மேலும், கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை நிலவரப்படி 14,569 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 8,852 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நங்காஞ்சி அணையின் தற்போதைய அணை நீர் நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை நிலவரப்படி 55 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் நங்காஞ்சி அணையில் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும், 39.37 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 37.40 கனடியாக உள்ளது. அணை பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்துள்ளது.
ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய நீர் நிலவரம்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 38 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 26.07 அடியாக உள்ளது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை நிலவரப்படி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், அணைப்பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழையின் அளவை தற்போது காணலாம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் நகர பகுதியில் 1.0 மில்லி மீட்டராகவும், கே.பரமத்தியில் 11.0 மில்லி மீட்டராகவும், மழையின் அளவு பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலாடுகளில் மழை இல்லை. மேலும், அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கே.பரமத்தியில் 11.0 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.