கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றுக் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழையின் அளவு அதிகரித்து வருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்று மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 18,181 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 19,629 கனஅடி தண்ணீராக அதிகரித்து உள்ளது. தண்ணீர் வரத்து அதிகம் வருவதால் டெல்டா பாசன சாகுபடிக்காக 19,629 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் மாயனூர் கதவணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.


 


 





அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து நிலவரம்.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 802 கன அடி தண்ணீர் வந்தது. பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்திருப்பதால் அமராவதி அணைக்கு இன்று காலை நிலவரப்படி 1,548 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 1,643 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 88 அடியாக இருக்கிறது. மேலும், கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டான் கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை நிலவரப்படி 1,589 காலடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 3,867 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


 


 





நங்காஞ்சி அணையின் தற்போதைய நீர்வரத்து.


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது . மேலும், 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 35. 76 அடியாக உள்ளது. இந்நிலையில் இன்று அணையில் இருந்து 91 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய நிலவரம்.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி, ஆத்துப்பாளையம் மலைக்கு நேற்று காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 24.60 அடியாக உள்ளது. ஆத்துப்பாளையம் அணையில் தற்போது 67 கன அடி தண்ணீர் வருகை.அணைக்கு தண்ணீர் வளர்த்து குறைவாக உள்ள நிலையில் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் ஆற்றின் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.





மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக அளவில் மழை பெய்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில இடங்களில் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றனர்.