கரூரில் முதன்முறையாக சர்வதேச ஸ்கேட்டிங் மைதானம் துவக்கம்

புகலூர் நகராட்சி தலைவர்  திறந்து வைத்து ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.

Continues below advertisement

கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் எதிரில், கரூரில் முதன்முறையாக சர்வதேச ஸ்கேட்டிங் மைதானம்  துவக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

 


 

இந்த புதிய ஸ்கேட்டிங் மைதானத்தை புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர் திறந்து வைத்து ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். 200 மீட்டர் பயிற்சி மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச ஸ்கேட்டிங் மைதானமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

 

இந்த மைதானம் குறித்து ஸ்கேட்டிங் பயிற்சியாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, "ஸ்கேட் தமிழா" என்ற பெயரில் கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஸ்பீட் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச தரத்திலான 200 மீட்டர் அளவுள்ள சிந்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை மாணாக்கர்களுக்கு தரைத்தளத்தில் தான் பயிற்சி கொடுத்தேன். அதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

 


 

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அனைத்து மாணாக்கர்களும் பயிற்சி பெற வேண்டும் என அழைக்கிறேன். மேலும், மாணவர்களை வெற்றி பெற செய்வதற்காகவே இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாணாக்கர்கள் தயக்கமில்லாமல் இந்த மைதானத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நான் செய்து தருவேன் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் அவர்தம் பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola