காமராஜ் மார்க்கெட் பகுதியில் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள்.
மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க புதிய காமராஜ் மார்க்கெட் வணிக வளாகம் ரூ.6.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக அப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக வருகின்ற ஜூன் மாதம் இந்தப் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு முதலமைச்சர் திருக்கரங்களால் இந்தப் பகுதி வணிக பெருமக்களுக்கு திறந்து வைத்து வழங்க இருக்கின்றார்கள்.
இங்கு 174 கடைகள் கொண்ட வணிக வளாகமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தரைதளத்திற்கான பணிகள் முடிக்க இருக்கின்றன. முதல் தளத்திற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
தரைத்தளம் கடைகள் வணிக பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கப்பட்டு அதற்குப் பிறகு முதல் தளம் நடைபெறுவதற்காக திட்டமிடல் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே வருகின்ற ஜூன் மாதம் கண்டிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகால வணிகப் பெருமக்களின் கோரிக்கை ஆனது.மிக மோசமான இருந்த காமராஜ் மார்க்கெட்டை முதலமைச்சர் நிதிகள் வழங்கப்பட்டு இப்பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே போல் மீன் மார்க்கெட் அமைவதற்கான தனியாக ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடும் பணிகள் விடப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றது. அதற்கான பணிகள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு முன்னெடுப்பு செய்ய இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர் மின்சார துறை அமைச்சர் தகவல்.
முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார், என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். கரூர் மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில், கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், காந்திகிராமம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. பரிசு வழங்கிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி, திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். மற்ற துறைகளை விட பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். எதிர்கால தமிழகத்தை வழிநடத்தக் கூடியவர்களாக மாணவ,மாணவியர் இருப்பார் என, முதல்வர் ஸ்டாலின் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார் அவர் பேசினார். எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர் ராஜா, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
.