தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம்.


 




 


கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 157 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட  வேண்டிய சிறப்புப் பணிகள் குறித்தும் அவர்களுக்கு பணித்தளங்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு இரு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.


அதன்படி கரூர் மாவட்டத்தில்  ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் 31.01.2023 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெறும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில்  வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இந்த குறைதீர்க்கும்  முகாமில் கலந்து கொண்டு  தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்  தெரிவித்துள்ளார்.


 




 


இணையதள முகவரியில்  பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வசதி.


தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா மாறுதலுக்காக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை தவிர்த்து இணைய வழியில் “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரி வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு  நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறையால்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பொது மக்கள் மேற்காணும் இணையதள முகவரியில்  பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கவும், உட்பிரிவு மற்றும் மனுவிற்க்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், மனுதாரர் மனுவின் ஒவ்வொரு  நடவடிக்கையின் நிலையை குறுஞ்செய்தி வாயிலாகவும் மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html  என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இது தவிர பட்டா மாறுதல் மனு  அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 



  1. பட்டா மாறுதல் உத்தரவின் நகல், 

  2. பட்டா /சிட்டா , 

  3. புலப்படம் 

  4. “அ” பதிவேடு 


 


 




 


ஆகியவற்றை “எங்கிருந்தும் எந்நேரத்திலும்” https://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கரூர், மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளின் நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் காண ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசின் கைத்தறித்துறை இயக்குனரும் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கி வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டமிடல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. காலையில் நாங்கள் எழுந்து வேலைக்கு செல்லும் அவசரக் கதியில் குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறத என தெரிவித்தார்கள். மேலும் பொதுமக்களிடம் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.