பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்.
கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியாக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியர் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 2013-இன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 21-01-2023 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் -2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் முதிரா மற்றும் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனம் பொது ஏலமானது வருகின்ற 25.01.2023 அன்று காலை 11.00 மணிக்கு கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும்.
ஏலத்திற்குண்டான வாகனம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 24.01.2023 அன்று காலை 10.00 மணி முதல் 25.01.2023 அன்று காலை 11.00 மணி வரை ஈப்பிற்கு ரூ.2000/-ம் முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகை மற்றும் GST விற்பனை வரியுடன் சேர்த்து 25.01.2023 அன்று உடனே செலுத்திட வேண்டும் என்பதனையும் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
வாத்து வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்கள் லாபம் தரக்கூடிய வாத்து வளர்ப்புப் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். அடுத்து பில்லா பாளையம், மேட்டு மகாதானபுரம், கீழ மாயனூர், லாலாபேட்டை , ஆகிய பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் வாத்து வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாய நிலங்களுக்கு செல்லும் சிறுபாசனவாய்களில் உள்ள பூச்சிகள் மண்புழுக்கள் என வாக்குகளுக்கு தேவையான மேய்ச்சல் கிடைக்கிறது. இதன் மூலம் வாத்துகள் நல்ல முறையில் வளர்த்து வருகின்றன.. வாத்து இறைச்சி மக்கள் விரும்பி வந்ததால் வாத்து வளர்ப்பு பணியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பண்டிகை காலங்களில் வாத்துகள் அதிகமாக விற்கப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாத்து ஒன்று 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.