கரூரில் அதிகாலையில் வந்த அரசுப் பேருந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.




நாகை மாவட்டம் வேளாண்கன்னியிலிருந்து  கரூர் வழியாக ஈரோடிற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருச்சி - கரூர் சாலையில் காந்திகிராமம் ராம் நகர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.


 




முன்பக்க சக்கரம் தடுப்புச் சுவர் மீது பலமாக மோதியதில் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பேருந்தை பவானியை சார்ந்த சந்திரமோகன் ஓட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 




சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் ரிப்ளைக்டர் ஸ்டிக்கர் ஏதும் ஒட்டப்படாததால் இது போன்ற விபத்துக்குள் இரவு நேரங்களில் ஏற்படுவதாக ஓட்டுநனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


 


சாலை விபத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்


கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை அருகே, உள்ள பாப்பயம்பாடி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் தரணிஷ். இவர் சம்பவத்தன்று வீரியபாளையம் செங்கல் சாலையில் பாப்பயம்பாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, புதுவாடி பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் வந்த மோட்டார் சைக்கிள் தரணிஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாமி தேவி ஸ்ரீ பார்வதி திம்மாச்சிபுரம் உறவினர்களான இவர்கள் மூணு பேரும்  பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவகாமி தேவி ஸ்ரீ பார்வதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.