கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி 1.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


 




கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மணல்மேடு பகுதியில் ஆட்டுச் சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். 


 




 


இந்த நிலையில், மணல்மேடு ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை வாங்குவதற்காக கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்ததால் மணல்மேடு ஆட்டு சந்தை களைகட்டியது. ஆட்டுச் சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் 2000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. நேற்றைய சந்தையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. சுமார் 1.5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.