கரூர் அருகே ஆம்னி பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது
பெங்களூரிலிருந்து நாகர்கோவில் சென்ற ஆம்னி பேருந்து கரூர் மாவட்டம் செம்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இருந்து சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பேருந்து முன்பு டிராக்டர் சென்று கொண்டிருந்ததை கவனித்த ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்த போது பேருந்து டிராக்டர் மீது மோதி சென்ட்ரல் மீடியன் தாண்டி எதிர் திசையில் சென்றது.
அப்போது வேனும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சுற்றுலா வேனில் வந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு. தக்சிகா 8 வயது சிறுமி, மற்றும் சுற்றுலா வேன் ஒட்டுநர், வேனில் பயணித்த ஒருவர் என 4 பேர் உயிரிழப்பு. மேலும் 15 நபர்கள் படுகாயம் அடைந்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ஆம்னி பேருந்து அதிவேகமாக சென்றதே தான் விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
படுகாயமடைந்தவர்கள் 14 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தியதில், கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு சுற்றுலா செல்ல இருந்த சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்தவர்கள் என இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
14 பேர் அரசு மருத்துவமனையிலும், மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.