விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 விவசாயிகளுக்கு ரூ 7.01  இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் வழங்கினார்.




கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், தலைமையில் நடைபெற்றது. இதில், விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார்கள்.
  
இக்கூட்டத்தில் சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும், அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பது அதனால் மாசு படுவதை தடுப்பு குறித்தும், ஆட்டுக்குட்டிகள் விற்பனை செய்வதற்கு தகுந்த நிறுவன அமைப்பதை குறித்தும், குடகனார் வாய்க்காலை வகைப்படுத்துவது குறித்தும், புலியூர் மற்றும் நெரூர் பாலம் அமைப்பது குறித்தும், சாலை வசதிகள், தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்தும், வேளாண்மை கல்லூரிக்கு இடம் தேர்வு செய்வது குறித்தும், குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைப்பதும், சாலைகளில் வேகத்தடை அமைப்பது குறித்தும், மயான கொட்டைகள் அமைப்பது குறித்தும், சாலையோரங்களில் உள்ள கிணறுகளில் ஓரத்தில் தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்தும், மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது குறித்தும், பட்டா திருத்தம் தொடர்பு குறித்தும், ஆக்கிரப்புகளை அகற்றுவதை குறித்தும், 


 




குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்தும், இடையராக உள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது அமைப்பது குறித்தும், கிராமப்புறங்களில் குளங்களைச் சுற்றி மரக்கன்றுகள் நடுவது குறித்தும், நில ஆக்கிரமிப்பு கல்குவாரி ஆவணங்கள் முறையாக வழங்க கோரிக்கையின் தொடர்பாகவும், சிமண்ட் சாலை, தார் சாலை அமைப்பது குறித்தும், சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும், தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன ரெட்டிபட்டி கிராமத்தில் சிறு சமுதாயக்கூடம் அமைப்பது குறித்தும், நெடுஞ்சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைப்பது குறித்தும், சுங்கச்சாவடிகள் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதைகளில் செல்லும் வாகனங்களை முறைப்படுத்துவது குறித்தும், 


அனைத்து விவசாய பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர் வாருதல் குறித்தும், தென்னிலைப் பகுதிகளில் பண்ணை குட்டைகள் மற்றும் உழவர் சந்தை அமைப்பது குறித்தும், கிராமப்புறங்களில் மண் சாலை பகுதிகளை கிராமப்புற சாலையாக அமைப்பது குறித்தும், விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாட்டை போக்குவது குறித்தும், மணவாடி கந்தாழப்பட்டி பகுதியில் கருவேல மரங்களை 100 நாள் வேலை திட்டம் மூலம் சுத்தப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.  


விவசாய பெருகுடி மக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.


பின்னர் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் 1 பயனாளிக்கு ரூ.10,000/- மதிப்பீட்டில் கத்திரி குழித்தட்டு நாற்றுகளையும்,  1 பயனாளிக்கு ரூ.5,000/-  மதிப்பீட்டில் கீரைவிதைகள் மற்றும் இயற்கை உரங்களும்,  உணவு மற்றும் சத்துமிகு தானியங்கள் பாதுகாப்பு திட்டத்தில் 1 பயனாளிக்கு     ரூ.6,000/-  மதிப்பீட்டில் சோளம் செயல் விளக்கத்திடல்களும், தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தில் 1 பயனாளிக்கு ரூ.1500/-  மதிப்பீட்டில் மரக்கன்றுகளும், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் 5 பயனாளிக்கு ரூ.6,79,000/-   டிராக்டர், ரொட்டவேட்டர், பவர்டில்லர்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு மனுதாரருக்கு சொந்தமான நிலத்தை மென்பதிவேற்றம் செய்ய ஆணை வழங்குதல் என மொத்தம் 11 விவசாயிகளுக்கு ரூ.7,01,500 /  மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.


மேலும், இன்று(25.11.2022) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கரிடம் வழங்கினார்கள். 




 


அதன் அடிப்படையில்  148  கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு) துணை இயக்குநர்கள் மணிமேகலை (தோட்டக்கலைத்துறை, பாலகிரருஷ்ணன் (மாநில திட்ட செயலாக்கம்) மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முனைவர் கே.உமாபதி, மண்டல இணை இயக்குநர்(பொ) (கால்நடை பராமரிப்பு துறை) மரு.முரளிதரன், வருவாய் கோட்டாட்சியர்கள்  புஷ்பாதேவி (குளித்தலை) ரூபினா(கரூர்), தனி துணை ஆட்சியர்(ச.பா.தி) சைபுதீன், முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட  பலர் கலந்துக்கொண்டனர்.