விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 3368 பயன்பெற்று உள்ளார்கள். இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
விவசாயி முருகேசன் கூறியதாவது:
முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இந்தியாவிற்கே முன்மாதிரியாக விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கி விவசாயிகளின் காவலனாக திகழ்ந்தார்கள். அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், விவசாயிகள் வாங்கிய பொதுக்கடன்களை ரூ.12,000 கோடி தள்ளுபடி செய்தும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கிய ரூ.5,000 கோடிக்கு மேற்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்தும், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற ரூ.2,624 கோடி என மொத்தம் ரூ.21,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்து, வேளாண் பெருங்குடி மக்களை பாதுகாத்து வருகிறார்கள்.
அதேபோல், விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களது உற்பத்தித்திறனை அதிகரித்து அதன் மூலம் இலாபத்தினை அதிகரித்திடவும், வேளாண் இயந்திரங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் இயந்திரங்களை வாங்குவதற்கான நிதியுதவியினையும், சிறு விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள், தார்ப்பாய்கள் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்பாராதவிதமாக, வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தால், அதற்கான இழப்பீட்டு காப்பீடுகளும், பங்குப்பத்திரங்களும் தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் வழிவகை செய்துள்ளார்கள்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் துயரைத் துடைத்திடவும், அவர்கள் மேற்கொள்ளும் தொழிலை மேம்படுத்திடவும், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தார்கள். அவ்வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, குறுகிய காலத்தில் 1 இலட்சம் மின் இணைப்புக்களை வழங்கிடவும் உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி உள்ளார்கள்.
தமிழகத்தில் இதுவரை 22 இலட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி, வரலாற்று சாதனையை முதலமைச்சர் நிகழ்த்தியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் மின் இணைப்பிற்காக ரூ.2.5 இலட்சம் கட்டினால் மட்டுமே மின் இணைப்பு கிடைத்து வந்த நிலையினை மாற்றி, எவ்வித பொருளாதாரச் செலவும் இல்லாமல் விவசாயிகளின் நலன் காத்திட இலவச மின்சாரத்தினை வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 2,807 விவசாயிகளுக்கு ரூ.2367.97 இலட்சம் மதிப்பீட்டிலான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5474.01 ஏக்கர் விலை நிலங்கள் பயனடைந்தள்ளது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 561 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கேசவன் தெரிவிக்கையில்,
நான் இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது 20 ஆண்டு காலமாக நான் டீசல் என்ஜின் மூலம் செலவு செய்து விவசாயம் பார்த்து எனது குடும்பத்தை பார்த்து வந்தேன். தற்போது தமிழக அரசு இலவச மின் இணைப்பை கூப்பிட்டு வழங்கி உள்ளார்கள். இனி எனக்கு ஆண்டு முழுவதும் டீசலுக்கு ஆகும் செலவும் மிச்சமாகும். இலவச மின் இணைப்பு வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.