கரூர் மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 254 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 3028 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.15.52 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன், 1 நபருக்கு கருணை அடிப்படையில் பணிநியமண ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 254 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 3028 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.15.52 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் மற்றும் 1 நபருக்கு கருணை அடிப்படையில் பணிநியமண ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா அவர்கள், துணை மேயர் சரவணன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், கரூர் மாவட்டத்தின் உடைய எழுச்சிமிகு பெண்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் இந்த நன்னாளில் நம்முடைய கூட்டுறவுத் துறையின் மூலமாக பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் மூலமாக கிட்டத்தட்ட 15 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3028 நபர்கள் பயன்பெறக்கூடிய கடன் தொகை வழங்கப்பட இருக்கிறது ஒரே நாளில் நாம் வழங்குகிறோம். நம்முடைய மேயர் மற்றும் துணை மேயர் அவர்கள் குறிப்பிட்டது போல தமிழ்நாடு மாநிலம் பெண்களுக்கு வலு சேர்ப்பதற்காகவும், பெண்களுக்கான வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
சீரிய முன்னோடி திட்டங்களின் வாயிலாக இன்றைக்கு அனைத்திலும் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமைகளில் இருந்து பெண்களுக்கு இன்றைக்கு கூடிய விரைவில் தொடங்கக்கூடிய மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் வரை பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், இது போன்ற திட்டத்தை பிறரும் பின்பற்றுவதுதான் ஒரு திட்டம் சிறப்பான முன்னோடி திட்டமாகும், இதுபோன்ற அனைத்து திட்டங்களிலும் இந்தியாவிலேயே முன்னோடியாக திகழும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு மகளிர் சுய உதவி குழுக்கள் என்கின்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர்தான். பெண்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த திட்டங்களை பயன்படுத்தி அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேண்டும்.
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் பெண்கள் கையில் நூறு ரூபாய் இருந்தால் அதை ஆயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாய்வும் பன்மடங்கு பெருக்குவதற்கு உங்களுடன் திறமையாக நீங்கள் திறமை உள்ளது ஆனால் இந்த ஊர் பெண்களுக்கு அந்த ஒரு இயல்பாகவே ஒரு தொழில் முனைவு உத்வேகம் உள்ளது. 242 மகளிர் சுய உதவி குழு கொண்ட 2715 உறுப்பினர்களுக்கு ரூ.12.64 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கடன், 303 நபர்களுக்கு ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் மத்தியக் காலக்கடனும், 9 மாற்றுத் திறனாளி நபர்களுக்கு .04 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடன் உதவியும், 1 நபருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையும் ஆக மொத்தம் 3028 நபர்களுக்கு ரூ.15.52 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்கள். கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி (பொதுவிநியோகத்திட்டம்), மாமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, கார்த்திக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.