கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடி செலவில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வந்த நிலை வெள்ளப்பெருக்கு காரணமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே புகளூரில் காவிரியாற்றின் குறுக்கே, 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டும் பணிகள் விறு விறுப்பாக நடந்து வந்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால் கட்டுமானப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.




கடந்த அதிமுக ஆட்சியில் இந்த தடுப்பணைக்கு பூமி பூஜை போடப்பட்டது. 406.50 கோடி ரூபாய் மதிப்பில் கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது. இதையடுத்து கடந்தாண்டு நவம்பரில் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புகளூரில் கதவணை கட்டும் பணிகள் நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே எழுந்தது. ஆனால், கதவணை கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.




புதிய கதவணை, 1,056 மீட்டர் நீளத்தில், 73 ஷட்டர்கள், அதில், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். புதிய கதவணையில் இருந்து வினாடிக்கு, மூன்று லட்சத்து, 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும். கதவணையின் வலதுபுற வாங்கல் வாய்க்கால் மூலம், 1,458 ஏக்கர் பாசன நிலங்களும், இடதுபுற மோகனூர் வாய்க்கால் மூலம், 2,583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதி பெற உள்ளது. புதிய கதவணை மூலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில், குடிநீர் ஆதாரம் கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் இந்நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் இரு கரங்களின் தொற்றுக்கொண்டு வெள்ளப்பெருக்கு ஓடுகிறது இதில் பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




 


இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பொழுது காவிரி ஆற்றில் அதிக நீர் செல்வதால் தற்பொழுது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண