கரூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு, வாகன விபத்தை குறைக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு 1,741 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு ரோந்து பணியாக குற்ற தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பதே தொடர்பாக கரூர் மாவட்ட போலீசார் சூப்பிரண்டு சுந்தர வதனம் உத்தரவுபடி, போலீசார் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் 1,741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 34 நம்பர் போர்டு இல்லாத மற்றும் போலீசான நம்பர் போர்டு உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டி முக்கியமாக 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தில் ஓட்டி சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க வேண்டி மாவட்டம் முழுவதும் தீவிர வாகனம் சோதனை செய்து 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறுவர்களின் பெற்றோர்கள் 65 பேரை நேரில் அழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் 27 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 27 பேர் கைது முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் மூலம் 51 பேர் சோதனை செய்யப்பட்டனர். குற்ற தடுப்பு தொடர்பாக இரவு நேரங்களில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 27 கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பிடி யானை பிறக்கப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் குற்ற தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து தொடர்பாக தொடர்பு சோதனை நடைபெறும் எனவும், வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வாகன சோதனை செய்யப்படும். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சி பழைய நிதிமன்ற வளாகத்தில் சமரச நாள் தினமாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நிதிபதி ஆர். சண்முக சுந்தரம் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் Roc.No.28/2023/TNMCC/Hct.MS என்ற உத்தரவின்படி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச நாள் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பாக 10/04/2023 ஆம் தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பேரணியானது நடத்தப்பட உள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கொங்கு, அரசு மற்றும் வள்ளுவர் கலைக் கல்லூரி மாணவர்களை கொண்டு சமரசம் பற்றிய விழிப்புணர்வு பேரணியானது நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வு பேரணியானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி அண்ணா வளைவு, நால்ரோடு, பஜார், மாரியம்மன் கோவில் மற்றும் அரச மரத்து ரோடு வழியாக பழைய நீதிமன்ற வளாகத்தை அடைவார்கள். இது தவிர ஆட்டோ மூலமாக சமரச மையத்தின் பணிகள் மற்றும் சமரசம் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் இத்துடன் நோட்டீஸ் கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வானது ஏப்ரல் 10-ம் தேதி முதல் 13-ம் ஆம் தேதி வரை தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களலிலும் மற்றும் குளித்தலை ஒருங்கிணைந்த நிதிமன்ற வளாகத்திலும் கொண்டாடப்பட உள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.