திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் உள்ள வண்ணாங்குளம், ஓண்ணுபுரம்,குன்னத்தூர், கொங்கரம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.


தொடர்ந்து இன்று செய்யார் மாவட்ட சுகாதார நல இணை இயக்குநர் பாபுஜி உத்தரவின் பேரில் ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் மமதா தலைமையிலான சுகாதார துறையினர் வண்ணாங்குளம் கிராமம், அத்திமலைபட்டு கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்இந்த ஆய்வில் வண்ணாங்குளம் கிராமத்தில் பழனிவேல் வயது (40) என்பவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து கொண்டிருந்த போது மருத்துவ துறையினர் பழனிவேலை கையும் களவுமாக பிடித்து செய்தனர்.


 




 


அதன் பிறகு பழனிவேலிடம் சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணையில் பழனிவேல் பி.பார்ம் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் சுகாதார துறையினர் பழனிவேலிடம் உபயோக படுத்திய மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். அதே போன்று ஆரணி வேலூர் சாலையில் உள்ள அத்திமலைபட்டு கூட்ரோடு அருகில் 10-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த செந்தில்குமார் வயது (40) என்பவர் தனது வீட்டிலேயே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போது சுகாதார துறை குழுவிடம் கையும் காளவுமாக சிக்கினார்.பின்னர் போலி மருத்துவர் செந்தில்குமாரிடம் மருத்துவ உபகரணங்களை சுகாதார துறையினர் பறிமுதல் செய்து செந்தில்குமார் மற்றும் பழனிவேல் ஆகிய 2 போலி மருத்துவர்களை கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் சுகாதார துறையினர் ஒப்படைத்தனர்.


 




 


பின்னர் 2 போலி மருத்துவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து வந்தவாசி, பிரம்மதேசம் கிராமத்தில் சுரேஷ்பாபு (வயது 43) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணையில், அவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் சுரேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல கிராமங்களில போலி மருத்துவர்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ளதால் சுகாதார துறையினர் களையெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.