தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த கனமழையால் கரூர் முக்கிய பகுதிகளான தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.


 




சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை சிரமத்துடன் மேற்கொண்டனர். மேலும், தாந்தோன்றிமலை, வெங்கடேஸ்வரா நகர், சவுரி முடி காரன் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். கரூர் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடையும்,  பலத்த காற்று வீசத் தொடங்கியது.




நீண்ட நாட்களுக்கு பிறகு கரூர் மற்றும் அதன் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக குளித்தலை பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் குளங்கள் நிரம்பி உள்ளது. அதேபோல் அரவக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.  



வானிலை அறிக்கையின்படி கரூர் மாவட்டத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என தகவல் வெளியான நிலையில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  ஆகவே,  மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பு முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



 


கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புகள் இருப்பதாக நீர் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண