அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி ஆகிய பகுதியில் கரூ மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி பள்ளப்பட்டி நகராட்சி வேலம்பாடி ஊராட்சி பாப்பநாயக்கன்பட்டி ஆகிய கிராம பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், அரவக்குறிச்சி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும், தர்கா கேர் காலனி பகுதியில் பொது மக்களுக்கு தினசரி வழங்கப்படும் குடிநீர் வசதிகளை பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தும், பள்ளப்பட்டி நகராட்சி, பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைப்பேட்டை நகரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும் காலை உணவினை ருசித்துப் பார்த்தும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை தரமாக வழங்க வேண்டும், பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வாகனங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், தொடர்ந்து பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்ட வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டும், பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் பராமரிப்பினை பார்வையிட்டும், பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் நிலையம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்
தினசரி பயன்படுத்தப்படும் பால் பொருட்களை முறையாக வழங்குவது குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வேலம்பாடி முருகன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து 756 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் கிராம பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குறித்தும், வேலம்பாடி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டி பணிகளையும், பள்ளப்பட்டி நகராட்சி, ரசூல் நகர், குப்பைக்காடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று சேகரிக்கப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து செயல்படுத்தும் பணிகளையும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும். உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கி பார்வையிட்டும், பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு தரம் மற்றும் ருசி குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களுக்கு அனைத்து பணிகளும் விரைந்து முடிப்பதற்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அறிவுறுத்தினார்கள். பின்னர் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வுக்கு கலந்து கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவு சீட்டு வழங்கினார்கள். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த ஆய்வின் போது தனி துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி,பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான், பேரூராட்சி செயலாளர் வேல்முருகன் பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் பால்ராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அன்புமணி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சிவராமகிருஷ்ண ராஜ், அரவக்குறிச்சிவட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சிவராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமாவதி, தேன்மொழி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.