கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.57 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.19.57 இலட்சம் மதிப்பீட்டிலான நிதி உதவிகள் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக திருநங்கையர்கள் சுயதொழில் செய்திடும் வகையில் ஐந்து திருநங்கைகளுக்கு முழு மானியமாக ரூ.1.29 இலட்சம் மதிப்பிலான நிதி உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.4.80 இலட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 பயனாளிகளுக்கு ரூ.4.53 இலட்சம் மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதித்த நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 8 பயனாளிகளுக்கு ரூ.8.40 இலட்சம் மதிப்பிலான வீல்சேர்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53,396 மதிப்பீட்டிலான திறன் பேசிகளும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.19.57 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்தங்கவேல் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் போஷன் பக்வாடா திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது தனித்துனை ஆட்சியர் சைபுதீன் (சமூக பாதுகாப்பு திட்டம்) உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.